இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனபடுத்தி பிரித்தானியாவில் இடம் பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…..!
நேற்றைய தினம் (4) இலங்கை திரு நாடானது தமது 78 ஆவது சுதந்திர தினத்தை மிக பிரமாண்டமாக இலங்கையின் பல பகுதிகளில் கொண்டாடியது
இத் தினத்தை கரி நாளாக பிரகடன படுத்தி ஈழத் தமிழர்களால் வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் பல தமிழ் தேசிய அம்சங்கள் இன அடக்கு முறைகளை முன் வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன் வைக்கப்பட்டது
அந்த வகையில் புலம் பெயர் தமிழர்களால் பிரித்தானியாவில் நேற்றைய தினம் காலை 11 மணியளவில்
லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈழத்தில் தொடர்ந்து தமிழர் மீது திணிக்கப்படும் அடக்குமுறைகள் தனி நாடு கோரிக்கை என்பன முன் வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இவ் ஆர்ப்பாட்டத்தில் புலம் பெயர் தமிழர்கள் புலம் பெயர் தமிழ் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிறுவர்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்