Sat. Dec 7th, 2024

இலங்கைக்கு ஆப்படித்த ஐநா, திருப்பி அனுப்பப்படும் இலங்கை அமைதிப்படையினர் -சவேந்திரசில்வாவின் நியமனத்தால் வந்த சோதனை

போர்க்குற்றச்சாட்டுகளிற்கு ஆளாகியுள்ள சவேந்திரசில்வாவை இலங்கையின் புதிய இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டதன் காரணமாகவே  ஐக்கியநாடுகளின்  இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது

இதனை ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.ஐநாவின் அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினரை ஈடுபடுவதை ஐநா தடை செய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர் மிகவும் அவசியமான நேரங்களில் மாத்திரம் தேவை என்றால் அவர்களை பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ஐநா அமைதிப்படையில் தற்போது படையாற்றி வருகின்ற இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவினர் அடுத்தமாதம் முதல் திருப்பி அனுப்புவோம் புதிய இலங்கை படையினரை இணைத்துக்கொள்ளமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இலங்கை அரசானது சர்வதேச அளவில் தனது நற்பெயரை கெடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல் பல மில்லியன் கணக்கான அந்நியச்செலாவணியையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஐநா, அமெரிக்கா , கனடா , இங்கிலாந்து உட்பட பலநாடுகள் கண்டித்து அறிக்கை விட்டபொழுது , இலங்கை அரசாங்கமும் வீரப்பாக இறையாண்மை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்