இலங்கைக்கான பிரயாண எச்சரிக்கையை மீண்டும் வெளியிட்ட அமெரிக்கா
நேற்றைய தினம் அமெரிக்கா மீண்டும் இலங்கைக்கான பிரயாண எச்சரிக்கையை தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்டது. இதன் படி இலங்கைகான பிரயாண எச்சரிக்கை தொடர்ந்தும் இரண்டு என்ற படிநிலையில் இருக்கும் என்று நினைவூட்டும் வகையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவுறுத்தலின் படி, எதிர்வரும் விடுமுறைகளத்தில், உல்லாசபயண இடங்களுக்கோ அல்லது மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லும்போது மிகுந்த அவதானமாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுமாறும், உள்ளூர் செய்திகளை அவதானமாக கவனிக்குமாறும் வேண்டப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே இலங்கை அரசாங்கம் பலநாடுகளிடம் தொடர்புகொண்டு பிரயாண எச்சரிக்கையை அகற்றுமாறு கெஞ்சி கொண்டிருக்கும் நேரத்தில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இலங்கைக்கு புதிய தலை இடியாக மாறியுள்ளது