இலக்கண போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்
தேசிய மட்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் வட இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி மயூரி மார்க்கண்டு முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டி கடந்த 7ஆம் திகதி கொழும்பிலுள்ள கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இதில் பிரிவு ஐந்தில், இலக்கண போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி சார்பில் போட்டியிட்ட மேற்படி மாணவி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று தனது பாடசாலைக்கும், மாகாணத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.