Mon. Aug 10th, 2026

இறுதிவரை திக் திக் ஆட்டம் கபடியில் தேசிய மட்ட சம்பியனாகியது யாழ் மாவட்ட இளைஞர் அணி

தேசிய மட்ட பெண்களுக்கான கபடிப் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
மாவட்ட இளைஞர் அணிகளுக்கு இடையிலான 36வது தேசிய மட்ட கபடிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மாத்தறை பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணியை எதிர்த்து கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி மோதியது.
இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் பலப் பரீட்சை நடாத்தினர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் யாழ் மாவட்ட இளைஞர் அணி 28:25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed