Sun. Nov 3rd, 2024

இறுதியில் வெளியேறும் சேரன் , கண்ணீரில் லொஸ்லியா, சோகத்தில் ரசிகர்கள்.,

இறுதியில் இன்று பிக் பாஸ்ஸின் 3 ஆவது ப்ரோமோ மூலம் சேரன் வெளியாவது உறுதியாகியுள்ளது. கடந்த நாட்களில் வெளிவந்த வதந்திகளுக்கு இது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த 2 நாட்கள் மட்டும் புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருந்த ஷெரின் , வனிதாவினுடான சண்டைக்கு பின்னர் மக்களின் அனுதாபம் பெற்றதால் முன்னிலை பெற்றார். இந்த நிலையில் சேரன் கடைசி நிலைக்கு நேற்று முதல் தள்ளப்படிருந்தார்.


இந்த நிலையில் இன்று வெளியிட்ட 3 ஆவது ப்ரோமோ மூலம் சேரன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. கமல் சார்,சேரன் என்று எழுதிய கார்ட்டை வைத்து வெளியில் வாருங்கள் பேசலாம் என்று அழைப்பதாக அந்த ப்ரோமோ உள்ளது. இதில் லொஸ்லியா சேரனின் கையை பிடித்து , இது நியாயம் இல்லை , உண்மையில் நான்தான் வெளியே போகவேண்டும் என்று அழுவதாக உள்ளது அந்த ப்ரோமோ.
இருந்த போதிலும் சேரன் வெளியே போவாரா அல்லது இரகசிய அறையில் தங்க வைக்கப்படுவாரா என்பது இன்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சி காட்டப்படும்வரை புதிராகவே இருக்கும்..

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்