Thu. Apr 18th, 2024

இரு பிரிவுகளில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி சம்பியன்

வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான வொலிபோல் தொடரில் 16 வயது மற்றும் 20 வயதுப்பிரிவுகளில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன்  கல்லூரி ஆண்கள் அணி சம்பியன்  கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
குறித்த போட்டிகள் நேற்று கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன.16 வயதுப்பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் கலட்டி றோ.க. த. க பாடசாலை அணியை எதிர்த்து உடுப்பிட்டி அ.மி கல்லூரியும் மோதின.  இதில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி  25:17 25:18 என்ற புள்ளிகள் பெற்று 2:0என்ற நேர் சென்றதில் வென்று சம்பியனாகியது உடுப்பிட்டி.அ.மி கல்லூரி மூன்றாமிடத்தை தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயாம் பெற்றது.
20 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான தொடரில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியை எதிர்த்து தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலய அணி மோதியது. இதில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி  25:22  25:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.  மூன்றாமிடமிடத்தை விக்னேஸ்வரா கல்லூரி அணி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்