இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், ஒருவா் உயிாிழப்பு, ஒருவா் படுகாயம்.
இலங்கையில் இன்று காலை இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் ஒருவா் உயிாிழந்து ள்ளதுடன், பெலிஸ் அதிகாாிகள் உட்பட பலபோ் படுகாயமடைந்துள்ளனா்.
இன்று காலை எல்பிட்டிய பகுதியில் அடகொஹொடே- போகஹ பகுதியில் பேருந்து ஒன்றில் வைத்து நபா் ஒருவ ா் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றாா்.
அலுத்கமவில் இருந்து எல்பிட்டிய வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்தினுள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (06) காலை 8 மணியளவில்
இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவரால் அதில் பயணித்த மற்றுமொரு பயணியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை மாத்தறை- திப்பட்டுவாவ பகுதியில் பொலிஸாா் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பொலிஸாா் படுகாயமடைந்துள்ளனா்.
மோட்டாா் சைக்கிளில் வந்த ஆயுததாாிகள் பாதுகாப்ப கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாா் மீது துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனா்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை பொலிஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேககத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள்
ஒன்றை நிறுத்துமாறு பணித்துள்ளனர். இதன்போது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.