Sat. Dec 7th, 2024

இரு தசாப்தங்களின் பின்: ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ள ஜே.வி.பி!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜே.வி.பியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இன்று அறிவிக்கப்படவுள்ளார்.

காலிமுகத்திடலில் இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் 28 பொது அமைப்புக்கள் பங்கேற்கவுள்ளதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நீண்டகாலம் அரசியலில் ஈடுபட்டுள்ள, தமது அணியிலேயே இருக்கின்ற ஒருவரையே இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பிரச்சினைகளை அறிந்த, நாட்டு மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படவுள்ளார் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக ஜே.வி.பி தமது வேட்பாளரை 20 வருடங்களின் பின்னரே களமிறக்கவுள்ளது.

1999 ஆம் ஆண்டு இடதுசாரி பொதுவேட்பாளராக நந்தன குணதிலக்க களமிறங்கி, 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து, கடந்த 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அப்போதைய பிரதமராகவிருந்த மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு ஜே.வி.பி ஆதரவளித்திருந்தது.

பின்னர், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரக களமிறக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஜே.வி.பியின் ஆதரவு வழங்கப்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, ஜே.வி.பி எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்காதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்