Thu. Jan 23rd, 2025

இரு குழுக்களுக்கிடையில் மோதல்!! -ஹீரோவாக மாறி தடுக்க சென்ற பி.ச உறுப்பினர் வைத்திய சாலையில்-

அப்புதளை ஹல்துமுள்ளையில் இரு குழுக்களுக்கு இடையில் நடந்த மோதலை தடுத்து சமாதானப்படுத்த முயன்ற பிரதேச சபை உறுப்பினர் கடுமையாகத் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையின் தீவிர கிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் தனிப்பட்ட காரணத்தால் முறுகல் நிலை ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற ஹல்துமுள்ளை பிரதேச சபை உறுப்பினர் ஆர்.எம். ஜயசேன என்பவர் மோதலைத் தடுத்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார்.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் ஹல்துமுள்ளை அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவை அரசினர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

மேற்படி சம்பவம் குறித்து ஹல்துமுள்ளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இருவரைக் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவர் விசாரணையின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்