இரு கண் பார்வையும் இழந்த நிலையில் தந்தை, வறுமையில் வாடும் குடும்பம், மூன்று பிள்ளைகளின் கல்விக்கு உதவி கோரல்

விசுவமடு தேராவில் பகுதியில் வசித்துவரும் மாணிக்கம் கருணதாஸ் என்பவரின் குடும்பம் 5 அங்கத்தவர்களை கொண்டது
1996 ம் ஆண்டு திருமணம் செய்து தற்போது மூன்று பெண் பிள்ளைகள் வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் இராணுவ நடவெடிக்கையில் இவரது குடும்பம் பல இடங்களில் வசித்து வட்டுவாகல் ஊடாக இராணுவ கட்டுப் பாட்டிற்குள் சென்று அங்கு இராமநாதன் முகாமில் இருந்து அங்கிருந்து மீளக்குடியமர்தத்தின் பின்னர் மீளவும் தமது சொந்த இடத்தில் வசித்துவருகின்றர்கள்
கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த வேலை தீடிர் என்று சுகயீனம் ஏற்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் வைத்தியர்கள் சோதனை செய்ததில் இவரின் மூலையில் கட்டி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு ஒப்பறெசன் செய்தனர்
அதன் காரணமாக இரு கண்களும் முற்றாக பார்வை இழந்துள்ளார் கூலி.வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தவர் தற்போது எந்த வருமானமும் இன்றி பிள்ளைகளின் கல்வி செலவுக்கு பெரும் துயரங்களை எதிர் கொண்டு வருகின்றது
மாணிக்கம் கருணதாஸ் குடும்பம் இவரின் மூத்த மகள்கருணதாஸ் கஜானி தரம் 11 இல் கல்வி கற்று வருகின்றார் இரண்டாவது மகள் சஜீபா தரம் 9 கடைசி மகள் தமிழ்விழி தரம் 7 இல் கல்வி கற்று வருகின்றார்கள் ஒரு தொழிலும் செய்ய இயலாது வீட்டில் படுத்த படுக்கையில் படுத்திருக்கும் இவரின் குடும்ப நிலையை உணர்த்து பிள்ளைகளில் கல்வி செலவுக்கும் வாழ்வாதார உதவிகளை செய்து தருமாறு கோரியுள்ளார் கருணையுள்ளம் கொண்டவர்கள் உங்களினால் முடிந்த உதவிகளை செய்ய முன்வருங்கள்