இருளில் மூழ்கும் பூநகரி சங்குப்பிட்டிப் பாலம்
பூநகரி சங்குப்பிட்டிப் பாலம் இருளில் காணப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பல மில்லியன் செலவில் அரசினால் அமைக்கப்பட்ட பூநகரிப்பாலம் பலமாதங்களாக இரவு வேளையில் மின்விளக்குகள் ஔிராமையால் இருளில் மூழ்கிக் கிடக்கின்றது.
நூற்றுக்கணக்கான சூரியப்படல் மின்கலங்களினூடாக தன்னியக்கமாகவே இரவு வேளையில் ஔிரக்கூடியதாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அழகுற காணப்பட்ட பூநகரி சங்குப்பிட்டி பாலம் பலமாதங்களாக கவனிப்பாரற்ற நிலையில் ஔியிழந்து இருளில் மூழ்கியுள்ளது.
இது மாலை வேளைகளில் அழகுற இருந்தபோது உள்ளூர் வெளியூர் சுற்றுலாவிகள் அதிகமாக சஞ்சரித்து வந்தனர்.
தற்பேது அவர்களின் வரவும் குறைந்துள்ளதோடு பாலமும் துருப்பிடித்தும் காப்பற் கழன்றும் பழுதடைந்து காணப்படுகின்றது. அத்துடன் பூநகரியிலிருந்து தனங்கிழப்பு வரையான காப்பற் வீதியும் சேதமடைந்து காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.