இரும்புக் கட்டிலுக்கு அருகே உறங்கியவர் மின்னல் தாக்கி பலி.
இருப்புக் கட்டிலுக்கு அருகில் தரையில் உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் நேற்று இரத்தினபுரி கிரியல்ல பகுதியில் நடைபெற்றது.
தற்போது இயற்கையின் அசாதாரண சூழ்நிலையால் கடும் காற்றுடன் கூடிய மழை பல இடங்களில் பெய்து வருகின்றது. இடி மின்னலுடன் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இரத்தினபுரியில் நிலத்தில் இரும்புக் கட்டிலுக்கு அருகே உறங்கிக் கொண்டிருந்த 20 வயதுடைய இளைஞன் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.