இருபத்தைந்து கெட்டப்புகளில் விக்ரம் – கமலுக்கு பழிவாங்கல்
கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில், வேறொரு ஹீரோவை வைத்து ஒரு படம் எடுப்பது உறுதியானது. ஒரு கதையை ரெடி பண்ணி ‘தூங்கா வனம்’ இயக்குநர் ராஜேஷ் கொடுக்க, அதன் ஹீரோ பாத்திரத்துக்கு சில நடிகர்களின் பெயரை எழுதி, அவர்களின் ப்ரொஃபைலுடன் கமலிடம் கொடுத்தனர் உதவியாளர்கள்.
ஆனால் அந்த ஃபைலை பார்க்காமலே துண்டுச்சீட்டில் ஒரு பெயரை எழுதி கொடுத்தார் கமல். அது ‘விக்ரம்’. அப்படித்தான் கடாரம் கொண்டானில் அவர் நுழைந்தார். ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் படமான அந்தப் படத்தில் சீயானின் உழைப்பு வழக்கம் போலவே வேற லெவல் வெறித்தனம். ஆனால் அவரது இயல்பான ராசிப்படி படம் ஓடவில்லை.
கமலுக்கு சற்று வருத்தம், சீயானுக்கோ பெரும் வருத்தம். கமலை சந்திக்க விக்ரம் டைம் கேட்டு, ‘இப்போ வேணாம். இருவரும் சங்கடங்களை மட்டுமே பகிர்வோம். பின்னொரு முறை பார்ப்போம்.’ என்று கமல் தவிர்த்துவிட்டதாக கோலிவுட்டில்பேசப்படுகிறது .
‘டிமாண்டி காலனி’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் புதிய ஸ்பெஷல் படமொன்றில் கமிட் ஆகி, நடித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம்.
இதில் அவருக்கு குவாட்டர் சதம் கெட் அப்புகள். ஆம், இருபத்தைந்து விதமான கெட் அப்புகளில் நடிக்கிறார் சீயான். இது வரையில் ஒரு நடிகர் ஒரே படத்தில் இப்படி இருபத்தைந்து கெட்டப்புகளில் நடித்ததிலை, இது உலக சாதனை! என்று இப்போதே சீயானை கொண்டாட துவங்கிவிட்டது கோடம்பாக்கம்.
குறும்புக்கார இளம் இயக்குநர்களோ ‘கடாரம் கொண்டான் கடுப்புகளால், கமலை ஓவர் டேக் பண்ணவே விக்ரம் இப்படி மெனெக்கெட்டு 25 கேரக்டர்களில் நடிக்கிறார். தசாவதாரத்தை டபுள் டைம் ஓவர் டேக் பண்ணும் முயற்சி இது. எல்லாம் போட்டி, பழிவாங்கல்.’ என்கிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் பற்றி அலட்டிக்காமல், அஜன் ஞானமுத்து மற்றும் சீயான் கூட்டணியோ ஹாலிவுட் மேக் -அப் வல்லுநர்களுடன் 25 விதமான மேக் – அப்களுக்காக சீரியஸ் ஆலோசனையில் இருக்கிறது.