இராணுவ வாகனம் மோதியதில் மதகுரு ஒருவர் கொல்லப்பட்டார்.

அனுராதபுரத்தில் உள்ள மதவாச்சி வீதியில் வெலிஓயா சந்திக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் புத்த மதகுரு ஒருவர் கொல்லப்பட்டார்.
இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான கப் ரக வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக போலீசார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த புத்த மதகுரு அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் காலமானார்
இறந்தவர் பாண்டுகபயாபுராவில் உள்ள தம்மநாகல ராஜமஹா விகாரையில் உள்ள 36 வயது துறவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இராணுவ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மதவாச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.