இராணுவ புலனாய்வு பிரிவு சார்ஜன் சமிக்க குமார சற்று முன்னர் கைது

இராணுவ புலனாய்வு பிரிவு சார்ஜன் சமிக்க குமார சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கீத் நோயர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தியே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமையவே குற்றப்புலனாய்வு துறையினர் இந்த கைதை மேற்கொண்டுள்ளனர் .
நேற்றைய தினமும் கீத் நோயர் கடத்தல் வழக்கு உட்பட்ட 6 முக்கிய வழக்குக்களின் இறுதி அறிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது