Thu. Apr 25th, 2024

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் விடுவிப்பு

தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் ஒரு தொகுதி விடுவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இராணுவத்தினர் அங்கு முன்னர் அமைத்திருந்த முட்கம்பி வேலிகள் இராணுவ தளபாடங்களை அகற்றி வருகின்றனர்.

ஜனாதிபதி பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோது யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணிகள் விடுவிப்பு கூட்டத்தில் இராணுவத்தினர் ஜனாதிபதிக்கு சில வாரங்களில் சுமார் 110 ஏக்கர் காணியை விடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் அதற்கான வேலைகள் இடம்பெறுகிறது.

பலாலி வடக்கில் 13 ஏக்கர், மயிலிட்டி வடக்கு 18 ஏக்கர், மயிலிட்டி வீசி ரோட் கிராமக்கோட்டு இராணுவ முகாம் காணி, கே.கே.எஸ். பிரிவில் 28 ஏக்கரும், கீரிமலையில் 30 ஏக்கரும், காங்கேசன்துறையில் 21 ஏக்கர் என 5 இடத்திலுமாக 110 ஏக்கரும் விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இவை சுதந்திர தினத்துக்கு முன்பாக விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதைவிட ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தையடுத்து ஜனாதிபதியின் உத்தரவின்படி வலி.வடக்கில் மேலும் காணிகள் இனங்காணப்பட்டு அதனையும் இராணுவத்தினர் விடுவிக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இவை அடுத்தகட்டமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் விடுவிக்கப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்