இராணுவ அதிகாாி வீட்டில் சிக்கிய பெருமளவு ஆயுதங்கள், தளபாடங்கள்.
குருநாகல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவா் கைது செய்யப்பட்ட நிலையில் அவா் களிடமிருந்து ரீ-56 துப்பாக்கி, மகஸீன் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,
கைது செய்யப்பட்ட இருவாில் ஒருவா் இராணுவ அதிகாாி எனவும், மற்றயவா் இராணுவ சிப்பாய் எனவும் தொிய வந்துள்ளதுடன், மேலும் பல ஆயுதங்கள், வாகனங்கள் உடைகள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீட்டை குருணாகல் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் நேற்று சோதனையிட்டனர். இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டியவரின் வீட்டில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்று,
அதனை சுத்தம் செய்வதற்கான கருவிகள், இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட ரைபில் ஒன்று, துப்பாக்கிகளுக்காக பயன்படுத்தும் தொலைநோக்கு கருவி ஒன்று,
போரா 12 துப்பாக்கிகளுக்காக பயன்படுத்தும் வெற்று தோட்டாக்கள் 6, இராணுவத்தினர் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் 2, பெல்ட் ஓடர் 2 மற்றும் பல பொருட்கள்
இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சந்தேக நபர்களை நேற்று குருணாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 48 மணிநேர தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.