Mon. May 18th, 2026

இரவு விபத்தில் வடமராட்சி இளம் குடும்பஸ்த்தர் பலி – அப்பகுதியே பெரும் சோகத்தில்

வரணி  சுட்டிபுரம் பகுதியில் இரவு 12 மணியளவில் இடம் பெற்ற கோர விபத்தில் திருமணமாகி ஒரு வருடமேயான இளம் குடும்பத்தர்  சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வடமராட்சி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் (வயது 30) என்ற இளம் குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். குறித்த சம்பவத்தால் அப்பகுதியே பெரும் சோகத்தில் உள்ளது.
அச்சுவேலி பகுதியில் தொழில் புரிந்து வரும் குறித்த  குடும்பத்தர்  நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு வடமராட்சி தேவரையாளி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற சமயம் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதிய விபத்தில் இவ் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
சடலம் உடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம்
பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed