இரண்டு பாதாள உலக நபர்களின் கொலை தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது
மாதம்பிட்டியவில் நேற்றையதினம் வெட்டிகொல்லப்பட்ட இரண்டு பாதாள உலக நபர்களின் கொலை தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்குளியவில் வைத்து சந்தேக நபர்களை 2 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளர்கர்கள்
கிராண்ட்பாஸில் உள்ள மாதம்பிட்டிய மயானத்துக்கு அருகே வைத்து பாதாள உலக கும்பலின் இரண்டு சந்தேக நபர்களை இன்னொரு போட்டி பாதாளக்குழு நேற்றையதினம் வெட்டி கொன்றார்கள். நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாக்குதலில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்படவுடன் மரணமானார்கள். இந்த தாக்குதலை ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட குழுவே மேற்கொண்டது