Fri. Jan 17th, 2025

இரட்டை குடியுரிமை சர்ச்சை!! அவசரமாக அமெரிக்க செல்லும் கோத்தா-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள கோத்தபாய ராஜபக்ச அவசர அவசரமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேட்பாளராக அறிவிக்கப்படத்திலிருந்து நாடு முழுவதிலும் உள்ள சமய தலங்களிற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கா செல்ல தயாராகி வருகிறார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் திடீரென எழுந்துள்ள நெருக்கடிகள் மற்றும் விசாரணைகளை அடுத்து அவர் அமெரிக்கா செல்லவுள்ளார்.

இலங்கை – அமெரிக்க குடியுரிமையை கொண்டிருந்த கோத்தபாய, தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்ததாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். அதற்கு முதலே இன்டர்நெட்டில் அவரின் குடியுரிமை இரத்து செய்ததற்கு ஆதாரமான ஆவணம் ஒன்று வலம்வந்திருந்தது

எனினும் அமெரிக்காவினால் நேற்று வெளியிட்ட பட்டியலிலிலும் அதற்கு முந்திய காலாண்டில் வெளியான பட்டியலிலும் கோத்தபாய தனது குடியுரிமையை நீக்கிக் கொள்ளப்பட்டதாக உள்ளடக்கப்படவில்லை. இந்நிலையில் தான் அவர் அவசர அவசரமான அமெரிக்கா செல்ல உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோத்தபாய உண்மையில் குடியுரிமையை நீக்கி இருந்தால் அவர் இம்முறை அமெரிக்கா செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்