இன்றைய சமூகத்தில் பல்வேறு வகையான சீரழிவுகளும், தற்கொலைகளும், தவறான முடிவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இதற்கு காரணம் சரியான வழிகாட்டல் இன்மையே.ஜ.றெஜிந்தா உளவளத்துறை மாணவி தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்

இன்றைய சமூகத்தில் பல்வேறு வகையான சீரழிவுகளும், தற்கொலைகளும், தவறான முடிவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இதற்கு காரணம் சரியான வழிகாட்டல் இன்மையே. உளவளத்துணையாளர்கள் அதிகமாக இருந்த போதும் அது பற்றிய சரியான விளக்கமின்மையே காரணமாகும். சரியான உளவளத்துணை கிடைக்குமிடத்து எல்லோரும் தமது வாழ்க்கையை இன்பமயமானதாக மாற்ற முடியும்.
மக்கள் மத்தியிலே உளவளத்துணை பற்றி தவறான எண்ணப்பாடுகளே காணப்படுகின்றது. உளநலம் குன்றியவர்கள் கடுமையான உளநலப்பிரச்சினை உடையவர்களுக்கே உளவளத்துணை வழங்கப்படுகின்றது என தவறான புரிதல் காணப்படுகின்றது. இவ்வாறான தவறான எண்ணப்பாட்டினாலேயே உளவளத்துணை செயற்பாட்டை நாடுவதில்லை. ஒரு சிலர் உளவளத்துணை செயற்பாட்டிற்கு வந்தாலும் ஒழித்து ஒழித்து சமூகத்திற்கு பயந்து மற்றவர்களுக்கு தெரியாமலே செல்கின்றனர். இதற்கு காரணம் உளவளத்துணை பற்றிய சரியான விளக்கமின்மை மற்றும் தவறான மனப்பாங்கே ஆகும். உளவளத்துணை பற்றி மக்கள் மத்தியில் புரிதலை ஏற்படுத்தலே இப்பதிவின் நோக்கமாகும்.

உளவளத்துணை என்பது ஒருவருக்கு அவரைப பற்றிய தெளிவை ஏற்படுத்தி அதற்கமைய அவர்எதிர்நோக்கும் பிரச்சினையை அவரே தீர்ப்பதற்குவழங்கப்படும் உதவியாகும் (கார்ல் ரோஜர்ஸ்), மேலும் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வதற்கு ஒருவரிற்கு உதவி தேவைப்படும் போது அதற்குத் தகுதியான ஒருவரினால் வழங்கப்பபடும் உதவி மற்றும் வழிகாட்டல் உளவளத்துணை எனப்படும். உளவளத்துணையாளன் உளவியல் விஞ்ஞான அறிவின் மூலம் துணை தன்னை நாடிவரும் துணைநாடுனரின் பிரச்சினைகளை தீர்க்கவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் அவர்களின் ஆளுமையை மேம்படுத்தவும் வழங்கப்படும் உதவியாகும். அதாவது ஒருவரது உள வளர்ச்சி பயணத்தில் ஏற்படுகின்ற தடைகளை வெற்றி கொள்வதற்கு அவருக்குவழங்கப்படு;ம் தொடர்ச்சியான உதவியே உளவளத்துணையாகும்.

நாடிக்குள்ளேயே மறைந்துள்ள அவனது ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து அதனை விருத்தி செய்து சம்பந்தப்பட்ட உளப் பிரச்சினையைக் குறைத்து அவனை சாதாரண நிலைக்குக் கொண்டுவரத்துணை செய்தலாகும்.
உளவளத்துணை ஒருவருக்கு தனியாக தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சினை ஒன்றிக்கு தீர்வொன்றைத் தேடிக் கொள்வதற்கு, தனியாள் ஆளுமையை கட்டியெழுப்புவதற்கு, பிரச்சினையான சந்தர்ப்பங்களில் சரியான தீர்மானத்துக்கு வருவதற்கு, தேவையான உளச்சத்தியை அபிவிருத்தி செய்வதற்கும், மற்றுமொருவருக்கு சொல்ல முடியாத ஒருவிடயத்தை நம்பிக்கையான ஓருவரிடம் கூறுவதன் மூலம் உள்ளத்தை அமைதிப்படுத்துதல் மற்றும் கற்றல் தொடர்பான இடர்பாடுகளை எதிர்கொள்ளும் போது சரியான வழிகாட்டலை பெறுவதற்கும், குடும்பத்தில் முரண்பாடு ஏற்படும் போது அதனை எவ்வாறு சீர் செய்து கையாளுதல் போன்ற பல்வேறு வகையான செயற்பாடுகளுக்கான வழிகாட்டியாக இவ் உளவளத்துணை உதவுகின்றது.
உளவளத்துணை செயற்பாட்டில் ஈடுபடுகின்ற உளவளத்துணையாளர் பல்வேறு ஒழுக்கவிழுமியங்களை கையாண்டே உளவளத்துணை செயற்பாட்டை மேற்கொள்கின்றார்.அவையாவன இரகசியம் காத்தல், துணை நாடியை மதித்தல், துணை நாடுனரின் நலனை கருத்தில் எடுத்தல், சமூதாய நலனை கருத்தில் எடுத்தல், சமய நம்பிக்கைகளை மதித்தல், துணை நாடுனரின் அனுமதியில்லாமல் அவரின் கதையை எழுவதை தவிர்த்தல், உளவளத்துணையாளர் மேற்பார்வைக்கு செல்லல் போன்ற ஒழுக்கவிழுமியங்களை தன்னகத்தே கொண்டே உளவளத்துணை செயற்பாட்டை மேற்கொள்கின்றார்.
மனிதர்கள் தம் உள்ளக்கிடக்கைகளை பின்வரும் மூன்று முறைகளில் பிறருக்கு வெளிப்படுத்துகின்றனர்.சொல்வழிச் செய்திகள் ,உடல்வழிச் செய்திகள் ,மொழி கடந்த செய்திகள் என்ற வகையில் வெளிப்படுத்துகின்றார்.இக்காலத்தில் உளவளத்துணையானது பலதுறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உளவளத்துணையானது கீழ் வரும் வகையில் மேற்கொள்ள்படுகின்றது.
1) தனிநபர் உளவளத்துணை
2) குடும்ப உளவளத்துணை
3) குழு உளவளத்துணை
உளவளத்துணையானது இலக்குகளை அடிப்படையாக கொண்டுடே மேற்கொள்ளப்படுகின்றது அந்தவகையில்
1. குறிப்பிட்ட இலக்குகள் (ளுpநஉகைiஉ புழயடள)
2. பொதுவான இலக்குகள் (புநநெசயட புழயடள)
1. குறிப்பிட்ட இலக்குகள் (ளுpநஉகைiஉ புழயடள)
ஆன்மீக இலக்கு (ளுpசைவைரயட நுடெiபாவநnஅநவெ)
சமூக நல இலக்கு (ளுழஉயைட றநடகயசந பழயட)
உறவு நிலை திறன் இலக்கு (சுநடயவழைளொip ளமடைட)
பிறருடன் பழகும் திறன்களை கற்றல் ,
பிறர் தேவைகளை அடையாளம் கண்டு செயற்படல் ,
மன்னித்து வாழல்
உளம்சார் இலக்குகள் (Pளலஉhழடழபiஉயட புழயடள)
– சுய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
– அறிவு செயலில் மாற்றத்தை ஏற்படுத்துதல்
– சுயமதிப்பீடு செய்ய வைத்தல்
– பொறுப்பேற்க வைத்தல்
– நடத்தை இலக்குகள் (டீநாயஎழைரசயட புழயடள)
– நடத்தையில் மாற்றம் ஏற்படுத்துதல்
– அசாதாரண அறிகுறிகளை குறைத்தல்
– வாழ்வியல் திறன் இலக்குகள் (ளுமடைடள புழயடள)
– திறன்களை அடையாளம் காண வைத்தல்
– வாய்ப்புக்களை பயன்படுத்த வைத்தல்
உடனடியான இலக்கு (ஐஅஅநனயைவந பழயட)
உடனே இப்பொழுதே தீர்வு காணவேண்டிய பிரச்சினைகளுக்கு உளவளத்துணை வழங்கல்
நீண்ட நாளைய இலக்கு (டுழபெ வநசஅ பழயட)நீண்ட காலத்தில் அடையக் கூடியஇலக்குகளுக்காக…..
– வாழ்க்கை தத்துவத்தை புரியவைத்தல்
– சுய உணர்வை பெற வைத்தல்
– முழுமையாக அவரை செயற்பட வைத்தல்
நடைமுறை இலக்குகள் (Pசழஉநளள பழயடள)
– பிறரை புரிந்து கொள்ள வைத்தல்
– இதமாக பேச வைத்தல்
– நட்புடன் பழக வைத்தல்
2. பொதுவான இலக்குகள் (புநநெசயட புழயடள)
– சகல தகவல்களினதும் இரகசியம் காக்கப்படுதல்
– தீர்மானம் எடுக்க வைத்தல்
– பிரச்சினைகளை தீர்த்தல்
– துயரங்களை குறைத்தல்
– தொடர்பாடல் திறன்களை மேம்படுத்தல்
– நேரான உளநலத்தை பெற வைத்தல்
– தனிப்பட்ட வளங்களை மேம்படுத்தல்
– நடத்தையில் மாற்றத்தை எற்படுத்துதல்
உளவளத்துணையானது இவ்வாறாக பல்வேறு வகையில் துணைபுரிகின்றது.இவ் உளவளத்துணை பற்றிய தெளிவு மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற போது அன்றாடம் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து இலகுவாக விடுபட்டுக் கொள்ள முடியும.; அத்துடன் அன்றாட பிரச்சினைகளினால் ஏற்படும் மனஅழுத்தத்தையும் குறைத்துக் கொள்ள முடியும்.எந்தவொரு பிரச்சினைக்கும் உளவளத்துணையாளரை நாடும் போது எமது மனப்பாரம் குறைந்து பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாமே எடுத்துக் கொள்ள இவ் உளவளத்துணை வழிவகுக்கின்றது. உளவளத்துணை பற்றி அனைவர் மத்தியிலும் தெளிவு ஏற்படும் பட்சத்தில் சமூக சீரளிவுகளையும் குறைத்துக் கொள்ள முடியும்.
ஜ.றெஜிந்தா
உளவளத்துறை மாணவி
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்