இன்று பிரதேச அலுவலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அடையாள வேலைநிறுத்தம்

பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேசசபைகளில் வேலைசெய்கின்ற அபிவித்தி உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்கள் .
அபிவிருத்தி அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதேச அலுவலங்கங்களில் சுமார் மொத்தம் 16000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்றனர் என்று தெரியவருகின்றது.
அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளை விடுத்தும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்தவித நடவடிக்கையம் எடுக்கவில்லை
இந்தநிலையிலேயே இன்றையதினம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடும் வகையில் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.