Sun. Apr 12th, 2026

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது.

(20 ரூபாவால்) ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக அதிகரித்துள்ளது.

(23 ரூபாவால்) ஒடோ டீசல் ஒரு லீற்றரின் விலை 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக (10 ரூபாவால்) அதிகரித்துள்ளதுடன் , சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக (15 ரூபாவால்) அதிகரித்துள்ளது.

இதேவேளை மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக (10 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed