இன்று திருமணம் விபத்தில் சிக்கிய மணமக்கள்- வவுனியாவில் சோகமான சம்பவம்
வவுனியா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் , யுவதிக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், இருவரும் நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திருமண தேவை கருதி வெளியில் சென்றிருந்தனர்
இந்த நிலையில் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் குருமன்காட்டு பகுதியில் எதிரே வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மணப்பெண் தலையில் பலத்த காயமடைந்துள்ள நிலையில் . மணமகனுக்கும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த பெண்ணுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்