இன்று தமிழ் கூட்டமைப்பை சந்திக்கும் அமைச்சர் சஜித் ?
நேற்றைய கூட்டணி கட்சிகளுடனான சந்திப்பின் தொடர்ச்சியாக இன்றயதினம் அமைச்சர் சஜித் பிரேமதாச குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பி சந்திக்கவிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளிவருகின்றன. இந்த சந்திப்பு இன்று மாலை அமைச்சர் மங்கள் சமரவீரவின் இல்லத்தில் இடம்பெறும் என்றும் தெரியவருகிறது. இது தொடர்பான அறிவித்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்றையதினம் கூட்டணிக்கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான தகவல்களை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடும் வரை வெளியிடாமல் இருப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக அறியமுடிகிறது