இன்று இரவு முதல் மீண்டும் புகையிரத தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
சம்பள பிரச்சினையை முன்வைத்து, இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் மனுர பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வைப் பெற்றுத்தரும் வரையில், இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே நேரத்தில் புகையிரத நிலைய அதிபர்கள் ,ஒழுங்கமைப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் ஆகியோரரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே தடம்பிரளுதல் மற்றும் என்ஜின் கோளாறுகளால் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் சிக்கி சின்னாபின்ன மாகப்போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது