Thu. Jan 23rd, 2025

இன்று இரவு முதல் கனமழை பெய்யும் – நாகமுத்து பிரதீபராஜா-

நேற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகச் சிறிய அளவிலான மழைவீழ்ச்சியே கிடைத்துள்ளது.

ஆனால் நேற்று இரவு முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்க தொடங்கியுள்ளது. இன்று (16.12.2023) பகல் குறைவான அளவு மழை கிடைத்தாலும் இன்று இரவு முதல் 18.12. 2023 ( வரும் திங்கட் கிழமை) வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை எதிர்வரும் 18.12.2023 அன்று மீளவும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மற்றுமொரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது.

அதனால் மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் 21.12.2023 முதல் கனமழை கிடைக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– நாகமுத்து பிரதீபராஜா-

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்