Sat. Jun 14th, 2025

இன்றும் தொடரும் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று ஆரம்பித்த 48 மணித்தியால அடையாளப் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் தொடரும் என்று தெரியவருகிறது. பல்கலைகழக தொழிற்சங்களின் துணை தலைவர் தம்மிக்க எஸ் ப்ரியந்த இதனை தெரிவித்துள்ளார்.அரச பணியாளர்களுக்கு சமமாக, தங்களது சம்பளத்தையும் ஏனைய கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரி பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக அனைத்து பல்கலைகழகங்களின் வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்திலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அவர் எச்சரிகை விடுத்தார்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்