Sat. Apr 20th, 2024

இன்றுமுதல் ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் சேவையில், எதிரிகளால் தாக்கி அழிக்கமுடியாது என புடின் பெருமிதம்

ரஷ்யாவின் முதல் அவன்கார்ட் ஹைப்பர்சோனிக் ஏவுகணைக ரெஜிமென்ட் சேவையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அவைகள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்ற தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழிநுட்பத்தின் மூலம் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட 20 மடங்கு வேகத்தில் செல்லும் என்றும் மற்ற நாடுகளை விட ரஷ்யா இதன் மூலம் ஏவுகணை தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது உள்ள ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பதாலோ அல்லது எதிர்காலத்தில் உருவாக்கவுள்ள தொழிநுட்பதாலோ இந்த ஏவுகணைகளை தடுக்கமுடியாது என்றும் மற்ற நாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் நிறைய முன்னேறவேண்டி உள்ளதாகவும் புடின் தெரிவித்தார்.
இந்த ஏவுகணையின் வேகத்தைவிட , இதன் பாதைகளை மாற்றக்கூடிய தொழில்நுட்பமானது எதிரிகளின் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்துக்கு சிம்ம சொப்பனம் என்றும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்