Thu. Apr 24th, 2025

இன்னொரு பிரபாகரன் தோன்ற வேண்டுமா இல்லையா என்பது உங்களின் கைகளில் , வல்வெட்டித்துறையில் வைத்து மங்களவை நோக்கி சுமந்திரன்

இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஆழிக்குமாரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் திறப்புவிழா கூட்டதில் பேசிய சுமந்திரன், இந்த வல்வெட்டித்துறை மண் இரு சாதனையாளர்களை உருவாகியுள்ளது. அதில் ஒருவரான ஆழிக்குமாரன் ஆனந்தன் சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இரண்டாவது நபரின் சாதனையோ நூல்கள் வடிவிலும் படங்களிலும் வந்துள்ளது. இந்த இரண்டாமவர் போன்றோர் இந்த மண்ணில் இருந்து இன்னொருமுறை தோன்ற வேண்டுமா இல்லையா என்பதை தெற்கில் உள்ள தலைவர்களும் அவர்களின் அரசியல் நிலைப்பாடும் தான் தீர்மானிக்கும் என்று மக்களின் கரகோசத்துக்கு மத்தியில் அமைச்சர் மங்கள சமரவீரவின் முன்னால் குறிப்பிட்டார்.இதனை அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாற்றி இருந்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்