இன்னும் சில தினங்களில் கூட்டணி, அடுத்தவாரம் முடிவுக்குள் வேட்பாளர் தெரிவு, என்கிறார் அமைச்சர் அகில விராஜ்
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை செயற்குழு கூடியே தேர்ந்தெடுக்கும் என்றும் , அடுத்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுடனான கூட்டணியை அமைக்கும் சகல தீர்மானங்களும் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஏனைய பங்காளிக் கட்சிகளை இணைந்துக்கொண்டு எமக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பும் ஏனைய தரப்புக்களையும் இணைந்து பரந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்ட்தாக அவர் தெரிவித்தா.ர்
இதற்கு சகலரதும் ஒத்துழைப்புகள் கிடைத்தன. ஆகவே அடுத்த சில தினங்களுக்குள் சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடாத்தி பரந்த கூட்டணியை அமைக்கும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார் .