இந்து சமய மக்களின் மனங்களை நோகடித்து. அடாவடித்தனம். சுமந்திரன் காட்டம்.

பிள்ளையாா் கோவில் தீா்த்தக்கேணி அருகில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமை மோசமான அடாவடித் தனம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறியுள்ளாா்.
மேற்படி விடயம் தொடா்பாக அவா் ஊடகங்களு க்கு மேலும் கருத்து தொிவிக்கையில் கூறியிருந்ததாவது, முல்லைத்தீவு மாவட்டம் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம்
நீதிமன்றை நாடிய நிலையில். நீதிமன்றம் வழங்கிய கட்டளையுள்ள சமயம் அவர்களால் மேல் நீதிமன்றை நாடியபோதும் முன்னர் வழங்கிய கட்டளையே வலுவில் இருக்கும்.
அதேபோல் ஆலய சூழலில் தகனம் செய்தமை இந்து மக்களை அவமதித்து வேண்டும் என்றே செய்த செயல்பாடானது மோசமான அடாவடித்தனமாகும்.
சைவ மக்களின் சமய நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டது மட்டுமன்றி சட்டத்தையும் மீறிச் செயல்பட்டுள்ளனர்.
இதேநேரம் குறித்த தகனக் கிரிகை எங்கே எப்படி இடம்பெற வேண்டும் என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த நிலையில் அதனை மீறி இடம்பெற்ற சம்பவத்தின்போது
அந்த இடத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்ற கட்டளையை எடுத்தியம்ப முற்பட்ட சட்டத்தரணி தாக்கப்படும்போது சட்டத்தை நடைமுறைப்படுத்தி
நீதிமன்ற கட்டளையை காத்து மக்களையும் காக்க வேண்டிய பொலிசாரின் முன்னிலையில் நடந்தமை மேலும் ஏமாற்றம் அளிக்கின்றது. அதனால் அங்கிருந்த பொலிசாருக்கு
எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரம் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் செய்யலாம் என ஒரு பௌத்த துறவி கூற முற்படுவது
பௌத்தத்திற்கு முன்னுரிமை என்றாலும் ஏனைய மதங்களிற்கும் தங்கள் அனுஸ்டானங்கள் கடமைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தலாம் எனவும் உண்டு.
அதேநேரம் இங்கே நீதிமன்றம் சார்ந்த நிலையில் சட்டத்தினை விட மதம் மேலானதாக கொள்ள முடியாது என்றார்.