Sun. Oct 6th, 2024

இந்திய மீனவா்களுக்கு இலங்கை கடல் எல்லைக்குள் வந்த இலங்கை அகதிகளுக்கு நடந்த கதி.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவா்களுடன் இணைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் இதுவரை இலங்கையிலேயே வசிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 31ம் திகதி மண்டபத்தில் இருந்து பொன்ழகு என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க புறப்பட்ட பொன்ழகு, சுகுமார், கணேசன், ஜாக்சன் ஆகிய நான்கு பேரும்

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது  திடீரென ஏற்ப்பட்ட சூழல் காற்று காரணமாக படகு பாறையில் மோதியதில். படகு பழுதாகியது.

இதனால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களும் படகை மீட்டு தரும்படி இலங்கை கடற்படையிடம் உதவிகோரி தஞ்சம் அடைந்தனர்.

இருப்பினும் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வரையும் கைதுசெய்து யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறைத் திணைக்களத்தினரிடம் கையளித்தனர்.

இவ்வாறு கையளித்த நால்வரையும்  திணைக்களத்தினர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர் செய்த நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விளக்க மறியலில் இருந்த நால்வரும் நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் முன்னிலையில்

ஆஜர் செய்தவேளையில் பொன்னழகு, சுகுமார் ஆகிய இரண்டு மீனவர்களையும் எதிர்காலங்களில் இலங்கை கடல் எல்லைக்குள் வரக் கூடாது என எச்சரித்து நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிவான்.

ஏனைய இரு மீனவர்களான கனேசன் மற்றும் ஜாக்சன் ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள மன்னார் மற்றும் ,யாழ்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 2000 மற்றும் 2006 ஆம் ஆண்டு

இறுதி கட்ட போரின் போதே இந்தியாவிற்க்கு அகதிகளாக சென்று  மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் என்பதால் இவர்கள் மீன்பிடிக்க

தமிழக மீன் வளத்துறை அனுமதிப்பதில்லை ஆனால் எப்படி மீன்பிடிக்க வந்தீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன் இருவருக்கும் பத்து ஆயிரம் ரூபா அபராதம் விதித்து

இலங்கையில் உள்ள அவர்களது சொந்த ஊர்களில் தங்கலாம் என உத்தரவிட்டார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்