இந்தியாவின் சந்திராயன்-2 நிலவுப்பயணம் தோல்வியில் முடிந்தது…
இன்று அதிகாலை இந்தியா நேரப்படி 1.48 மணியளவில் இஸ்ரோ தரை இறங்கும் கலமான விக்ரத்துடனான தொடர்பை இழந்தது. இது சரியாக சந்திரனில் இருந்து 2.1 Km தூரத்தில் ஏற்பட்டது. இறங்கு கலத்தை சந்திரனை நோக்கி கட்டுப்பாடுடன் கொண்டுசென்றபோதே இது நிகழ்ந்துள்ளது. சந்திரனை சென்றடைவதற்கு சொற்ப வினாடிகள் இருக்கும் போதே இது நிகழ்ந்துள்ளது .பிரதமர் மோடி உட்பட முழு இந்தியாவுமே மிகவும் விழிப்புடன் காத்திருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டறைக்கு வெளியே கண்ணாடிவழியாக இந்த நிகழ்வை பாத்திருந்தார். இதன் மூலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடு என்று பெருமையை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
இந்தசம்பவத்தின் பின் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உற்சாக படுத்தும்படி பேசினார். முழு இந்தியாவுமே உங்கள் பின்னால் உள்ளதாகவும் , நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்துகிறீர்கள் என்றும் குறிப்பிடடார்.