விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவரவுள்ள பிகில் திரைப்பட பாடல் இணையத் தளத்தில் வெளியானதில் படக் குழு அதிர்ச்சியில் உள்ளனர்.
பிகில் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார். இதன் இசை வெளியீட்டு நிகழ்வை அண்மையில் நடாத்த படக் குழு ஏற்பாடுகள் செய்யும் போது இணையத் தளத்தில் இப் பாடல் வெளியிட்டதையடுத்து படக் குழு அதிர்ச்சியில் உள்ளனர்.
தந்தை- மகன் எனும் இரு வேடங்களில் அட்லீயின் இயக்கத்தில் தீபாவளி தினத்தன்று வெளிவரவுள்ள படம் பிகில்.
இதில் நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.