Thu. Sep 17th, 2026

இடைத்தங்கல் முகாம் கற்கோவளம் பாடசாலையில் சிரமதான பணியில் பலரும் பங்கேற்பு

இடைத்தங்கல் முகாமாக செயற்பட்ட பருத்தித்துறை கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை பல தரப்பினராலும் நேற்று புதன்கிழமை தொற்று நீக்கம் செய்யப்பட்டு சிரமதானம் செய்யப்பட்டது.
தற்போது இடம்பெற்ற பேரிடரினால் குறித்த பாடசாலை இடைத்தங்கல் முகாமாக செயற்பட்டது.
அதன் பின்னர் பொது மக்கள் வெளியேறியதைத் தொடர்ந்து வடமராட்சி எள்ளங்குளம் இராணுவத்தினர், ஜே/406 கிராம உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து குறித்த பாடசாலையை தொற்று நீக்கம் செய்து சுற்றுப்புற சூழலை சிரமதானமும் செய்தனர்.
குறித்த செயலுக்கு பாடசாலை சமூகத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply