Thu. Mar 28th, 2024

இடர்பாடுடையவர்கள் நாளை பாடசாலைக்கு செல்லத் தேவையில்லை – ஜோசப் ஸ்டாலின்

பாடசாலை செல்வதில் இடர்பாடுடைய ஆசிரியர்கள் எவரும் பாடசாலைகளுக்குச் செல்லத் தேவையில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகரப்புற பாடசாலைகளுக்கு எதிர்வரும் 10ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பாடசாலைகள் அதிபர்களின் விருப்பப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஆசிரியர்கள் பலர் நகர்புறத்திலிருந்து கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எரிபொருள் இன்மை காரணமாக அவர்களால் பாடசாலை செல்ல முடியாது. இவ்வாறான இடர்பாடுடையவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு விசேட விடுமுறை அரசு அறிவித்துள்ளது. இவ்வாறான காரணத்திற்காக செல்ல முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறை வழங்கப்பட்டால் தாம் அது தொடர்பாக அக்கறை செலுத்துவோம்.  எனவே இடர்பாடுடைய ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்லத் தேவையில்லை. அதிகாரிகளின் சாரதிகளே எரிபொருள் பெறுவதற்காக காத்திருக்கின்றனர் .அதிகாரிகள் அல்ல, இதனால் இதன் கஷ்டங்கள் அவர்களுக்குப் புரிவதில்லை. இதேபோல் சில அதிபர்களும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தெரிந்து கொள்ளாமல் கிணற்றுத் தவளைகள் போல் நிர்வாகம் நடாத்தி வருகின்றனர். எனவே கிராமப்புற பாடசாலைகள் எவை என அரசு வகைப்படுத்தவில்லை. எனவே இடர்பாடுடைய ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்லத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்