Mon. May 18th, 2026

ஆ.ஜென்சன் றொனால்ட்டுக்கு அறிவியலுக்கான விருது

பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட்டுக்கு அறிவியலுக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவில் மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன்றொனால்ட்(கவிஞர்.சூரியநிலா) க்கு சிறந்த நூற்பரிசுத் தெரிவில் அறிவியலுக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
சுவாசத்தொகுதி சார்ந்த தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பற்றியும் அவற்றின் ஆபத்துக்காரணிகள், தொழில் சுகாதாரம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து 2022 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட “என்சுவாசமே” எனும் நூலுக்கே அறிவியலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
நூலாசிரியருக்கு 2021ஆம் ஆண்டிலும் “சுகவிழி”எனும் சுகாதார மேம்பாட்டு ஏட்டிற்கு அறிவியலுக்கான விருது வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed