ஆஸ்திரேலியாவிலிருந்து 13 பேர் நாடு கடத்தப்பட்டார்கள்
ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 13 இலங்கை சட்டவிரோத குடியேற்றவாசிகள் , இன்று காலை காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்கள்.
இவர்கள் அனைவரும் சிலாபத்திலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் பல நாட்கள் பயணித்து ஆஸ்திரேலியா சென்றவர்கள் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு விமானத்தில் வந்ததடைந்த இலங்கையர்களுடன் பல ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகழும் உடன் வந்திருந்தனர்
இவர்கள் அனைவரும் குடிவரவு திண்கைள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் விமானநிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்