ஆழியவளை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட புத்தளம் மீனவா்.
யாழ்.ஆழியவளை கடற்கரையில் மீனவா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். குறித்த மீனவா் புத்தளம் பகுதியை சோ்ந்தவா் என கூறப்படுகின்றது.
ஆழியவளை பகுதியில் உள்ள மீனவா்களிடம் சம்பளத்திற்கு வேலை செய்வதற்காக புத்தளம் உடப்பு பகுதியிலிருந்து வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
சடலமாக மீட்கப்பட்டவா் புத்தளம்- உடப்பு பகுதியை சோ்ந்த கதிா்காமு முத்தையா சிறீகாந்த் (வயது 44) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.