ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக நீச்சல் தடாகம் திறந்துவைப்பு
.
கெரவ அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக நீச்சல் தடாகம் ஒன்று
வல்வெட்டித்துறையில் இன்று திறந்துவைகப்பட்டது. விளையாட்டு அமைச்சின் நிதி உதவியுடன் வல்வெட்டித்துறை கடற்கரைக்கு மிகவும் சமீபமாக இந்த நீச்சல் தடாகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரனும் பங்குபற்றி இருந்தார்கள்.
யாழ் மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் , சிவாஜி லிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அரசாங்க அதிகாரிகள் பங்குபற்றி இருந்தார்கள். ஆழி குமரன் ஆனந்தனின் மனைவி மற்றும் மகனும் இந்த நிகழ்வில் பங்குபற்றி இருந்ததுடன், மனைவியே நாடுகல்லுக்கான திரைசீலையை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது