ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம் – ப.தர்மகுமாரன்
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் ஆசிரியர்களின் ஆரோக்கித்தினை உறுதிசெய்ய மருத்துவ பரிசோதனை அவசியம் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்களின் உடல் ,உள ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனை கட்டாயப்படுத்த வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசியசங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய காலப்பகுதியில் இளவயது ஆசிரியர்களின் இறப்பு வீதம் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் தவறான உணவுபழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்யாமை, திடமிடப்படாத வாழ்க்கைமுறை, நேரமுகாமைத்துவம் இல்லாமை, உளநெருக்கீடு போன்றன செல்வாக்கு செலுத்துகின்றது. அத்துடன் ஆசிரியர்களின் சுமை காரணமாக தங்களில் அக்கறை கொள்ளாது மருத்துவ ஆலோசனைக்கு செல்வதை காலம் தாழ்த்துதல், இழுத்தடிப்பு செய்து நோயின்தாக்கம் அதிகரித்த பின் மருத்துவரை நாடுதல் எந்தப் பயனையும் தராது. எனவே அதிகளவான ஆசிரியர்கள் எதாவது ஒரு தொற்றா நோய்க்கு உட்பட்டே உள்ளனர். அது உடனடியாக மாற்ற முடியாவிட்டாலும் எமது கட்டுப்பாட்டில் வைத்து ஆயுளை அதிகரிக்க முடியும். அதற்கு மருத்துவ ஆலோசனையை பெற மருத்துவமனைக்குச் செல்வது அவசியம். ஆனால் ஆசிரியர்கள் நோயை இனம் கண்டும் தவிர்த்து வருகின்றனர். சிலர் நோயை தெரியப்படுத்தினால் தான் பாவம் செய்ததாக மற்றவர்கள் கூறுவார்கள் என்ற மூடநம்பிக்கையின் நிமித்தம் நோயை வெளிப்படுத்துவதில்லை. எனவே மருத்துவம் வளர்ச்சியடைந்தும் அதனை சரியானமுறையில் பயன்படுத்த தவறுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பிரதேச வைத்திய அதிகாரப் பிரிவில் அந்ததந்த பிரதேச பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் வழங்குவதுடன் தனிப்பட்ட மருத்துவ அட்டைகளை தொடர்வதற்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும். இல்லையேல் இது கற்றல் செயல்பாட்டையும் பாதித்து, புத்திஜீவிகளின் எண்ணிக்கையையும் படிப்படியாக இழக்க வேண்டிவரும் எனத்தெரிவித்தார்.