ஆயுத தாரிகளால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட்னர்
கன்வெல்லவில் உள்ள பகத்கமவில் நேற்றைய தினம் இரண்டு பேரை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிள் சுட்டுக் கொன்றுள்ளனர்
இரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்கள்
முகத்தை மறைத்து வைத்திருந்த இரண்டு துப்பாக்கிதாரிகளும் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து வீட்டு உரிமையாளர் மற்றும் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த 43 மற்றும் 32 வயதுடைய இருவரும் அவிசாவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணம் அடைந்தனர்
கன்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்