ஆபத்தாக மாறும் ரயில் பயணங்கள், தொடரும் தொடரூந்து தடம்புரழ்வுகள்
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தராதேவி புகையிரதம் பொல்கஹவெல தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது. இதனால் பாதையில் செல்லும் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தொிவித்துள்ளது.
கடந்த ஞாயிறன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கு நோக்கி சென்ற புகையிரதம் மஹாவ பகுதியில் தடம்புரண்டதும் , கடந்த செவ்வாய்க்கிழமையும் இதேபோல் அவிசாவளைக்கும் புவக்பிட்டியவுக்கும் இடையில் இன்னொரு புகையிரதம் தடம்புரண்டதும் குறிப்பிடத்தக்கது.