Sat. Feb 15th, 2025

ஆனந்த சங்காியின் முன்மாதிாி, 20 ஏக்கா் காணியை மக்களுக்கு வழங்கினாா்.

புதுக்குடியிருப்பு- சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனது 20 ஏக்கா் காணியை அங்கு குடியிருக்கும் மக்களுக்கே பகிா்ந்து வழங்குமாறு ஆனந்த சங்காி புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் தெங்கு அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட திட்ட காணியினை மக்களிற்கு பகிர்ந்தளிக்க முன்னால்

நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி பிரதேச செயலாளரிற்கு ஆலோசனை வழங்கியிருந்தார். 20 ஏக்கர் காணியில் மக்கள் நீண்ட காலமாக வாழந்து வந்த நிலையில்

காணி உரிமம் இல்லாமையினால் பல்வேறு நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குறித்த காணியை தமக்கு தருமாறு

மக்கள் தம்மை சந்தித்து கோரியிருந்த நிலையி் காணியை பகிர்ந்தளிக்க ஆனந்தசங்கரி பிரதேச செயலகத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று சில ஊடகங்கள் அவரிடம் வினவியிருந்தன். தனக்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என சொத்து சேர்த்துக்கொள்வதற்கு ஆசை கிடையாது.

இன்றுவரை கிளிநொச்சியில் என்கென அரசால் வழங்கப்பட்டதாக கூறக்கூடிய சொத்து எதுவும் இல்லை. எந்தனையோ சந்தர்ப்பங்கள் எனக்கு அவ்வாறு

சொத்து சேர்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இருந்தபோதிலும் நான் செய்யவில்லை. குறித்த காணியை பெற்றுக்கொள்வதற்கு ஆரம்ப்ததில் அரசாங்க அதிபரை நாடியிருந்தேன்.

எனினும் அங்கு மக்கள் குடியிருப்பதை அறிந்து பின்னவர் எவ்வித நடவடிக்கையையும்  நான் மேற்கொண்டிருக்கவில்லை. இந்த நிலையில் மக்கள் அண்மையில் என்னை சந்தித்தனர்.

தற்போது உள்ள நிலை தொடர்பில் பிரதேச செயலாளரும் தெளிவுபடுத்தியிருந்தார். அவரது முயற்சியாலும், மக்களின் தேவை கருதியும் குறித்த காணியை

மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு நான் பிரதேச செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்