ஆதிக்கம் செலுத்தி ஆவரங்கால் இந்து இளைஞர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
கைதடி தெற்கு சனசமூக நிலையத்தின் 64வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மின்னொளி
விளையாட்டுக்கழகம் நடாத்தும் “ஏ” பிரிவு அணிகளுக்கான முத்துமாரி அம்மன்
மரக்காலை உரிமையாளர் செ.பஞ்சலிங்கம் அவர்களின் அனுசரணையில் இடம் பெறும்
கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி வெற்றி
பெற்றது.
நேற்று வியாழக்கிழமை மின்னொளியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர்
அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல்
ஆதிக்கம் செலுத்திய ஆதிக்கம் செலுத்திய ஆவரங்கால் இந்து இளைஞர் 25:13, 25:22
என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி
பெற்றது.