ஆண்களுக்கான மேசைபந்தாட்டத்தில் யாழ் மாவட்ட அணி சம்பியன்
வடமாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான மேசைப்பந்தாட்டப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட அணி சம்பியன் கிண்ணத்தையும் கிளிநொச்சி மாவட்ட அணி இரண்டாம் இடத்தையும் மன்னார் மாவட்ட அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.