ஆணிகளை உணவாக உண்ட தொழிலாளி

ஆணிகளை உணவாக உண்ட தொழிலாளி
10 ஆண்டுகளுக்கு மேலாக இரும்புகளை உட்கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளியின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்ட ஆணிகளை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 49 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு இடம் பெற்றுள்ளது. இவர் வயிற்று வலியால் வைத்தியசாலைக்குச் சென்ற போது வயிற்றை ஸ்கான் செய்து பார்த்த வைத்தியர்கள் வயிற்றினுள் நூற்றுக்கணக்கான இரும்புத் துண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.
இது தொடர்பாக உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் எனவும் சுமார் 10 ஆண்டுகளாக இரும்புத் துண்டுகளை கண்டால் அதனை விழுங்கும் பழக்கம் கொண்டவராகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அறுவைச் சிகிச்சையின் பின் 100ற்கும் மேற்பட்ட இரும்புத் துண்டுகளை வைத்தியர்கள் எடுத்துள்ளனர்.