Sun. Nov 10th, 2024

ஆணழகன் மற்றும் மரதன் ஓட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதுடன் வீடுகள் அமைத்துக் கொடுக்க ஏற்பாடு

மலையக மக்களுக்கு பெருமை தேடிக் கொடுத்த ஆணழகன் மற்றும் மரதன் ஓட்ட வீரர்களுக்கு “மிஸ்டர் மலையகம்” “ஹோர்ஸ் ஒவ் மலையகம்” என பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்   வீடுகள் அமைத்துக் கொடுக்க மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்  நடவடிக்கை எடுத்துள்ளார்.
சீனாவில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் வென்கல பதக்கம் பெற்ற லபுகலை தோட்டத்தினை சேர்ந்த ராஜ்குமாருக்கு “மிஸ்டர் மலையகம்” எனவும்  ஈராக்கில் இடம்பெற்ற மரதன் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வெலிஓயா தோட்டத்தினை சேர்ந்த சன்முகேஸ்வரனுக்கு “ஹோர்ஸ் ஒவ் மலையகம் ”  என விருதுகள் வழங்கப்பட்டதுடன் 7 ஏக்கர் காணியில் 10 லட்சம் ரூபா பெறுமதியான  தனித்தனி வீடுகளை அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் இரு வீரர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று அமைச்சரின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்